News December 20, 2025
ராணிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கைது

ராணிப்பேட்டையில் பாஜக மாநில பொறுப்பாளர் வேலூர் இப்ராஹிம் போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை அங்குள்ள ஒரு பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற போது போலீசார் இங்கு தொழுக வேண்டாம். தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கருத்தில் கொண்டு போலீசார் தெரிவித்தனர்.ஆனால் வேலூர் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வேன் என்று கட்டாயத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
Similar News
News December 26, 2025
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியத் திட்டம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் சென்னை சேப்பாக்கம் சிறுபான்மை நலத்துறை ஆணையர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று(டிச.26) தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
ராணிப்பேட்டை: வோட்டர் ஐடி-யில் திருத்தமா..?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேகொள்ள நாளை(டிச.27) முதல் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தேவையுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 26, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


