News December 20, 2025
விழுப்புரம்: பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பு!

செஞ்சி அருகே கடந்த 2020-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து, மிரட்டல் விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அஞ்சாசேரியைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 30, 2025
விழுப்புரம்: அதிகாரிகள் லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 04146-259216 (அ) விழுப்புரம் மாவட்ட அலுவகத்தை (044-27667070) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!
News December 30, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால்,ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News December 30, 2025
ராமதாஸ் ஆதரவாளர்கள் மீது அன்புமணி தரப்பினர் புகார்!

விழுப்புரம்: திண்டிவனம் காவல் நிலையத்தில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜிடம் இன்று புகார் அளித்துள்ளனர். அதில், பாமக தொண்டர்கள் மீதும், அன்புமணி ஆதரவாளர்கள் மீதும் தொடர்ந்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசி வன்முறையில் ஈடுபடுவதாக கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.


