News December 20, 2025

தாராபுரத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார், தாராபுரம் பொள்ளாச்சி ரோடு அருண் பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பல்லடம் பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த அஜய் சஹானி (37) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 12, 2026

திருப்பூரில் இப்பகுதியில் மின்தடை

image

திருப்பூரில் இன்று (ஜன.12) பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம், கரடிவாவி, புளியம்பட்டி, சின்னப்பன்புதூர், ராஜாயூர், அவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, தூங்காவி, ராமகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News January 11, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.11) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News January 11, 2026

திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!