News December 20, 2025
கன்னக்குழி அழகி சித்தி இத்னானி

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்தி இத்னானி. இவர் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட்ட தல’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கன்னக்குழி சிரிப்பழகால் அனைவரையும் காதல் வலையில் சிக்க வைக்கும் அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகியுள்ளது. சிரிப்பால் கவிபாடும் இத்னானிக்கு ஹார்டின்களை ரசிகர்கள் பறக்கவிட்டு வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
மீனவர்கள் கைதை தடுக்க CM ஸ்டாலின் கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க கோரி CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளால், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 28, 2025
ஹாதி கொலை குற்றவாளிகள் இந்தியாவுக்கு தப்பியுள்ளனரா?

மாணவர் தலைவர் ஹாதி படுகொலை வழக்கில் தொடர்புடைய 2 முக்கிய நபர்கள் இந்தியாவுக்கு தப்பியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். ஹலுகாட் எல்லை வழியாக மேகாலயாவுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இருவரையும் கைது செய்ய இந்திய அரசின் உதவியை வங்கதேசம் நாடியுள்ளது. ஆனால், இந்தியாவிற்குள் இருவரும் நுழைந்துள்ளதை இதுவரை மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
News December 28, 2025
4 ராசிகளுக்கு எச்சரிக்கை

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுக்கிரன், செவ்வாய் ஆகிய 2 எதிரி கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருப்பதால் 4 ராசியினர் சவால்களை சந்திக்கக் கூடுமாம். மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசியினர் வேலையில் மன அழுத்தம், ஆரோக்கியத்தில் பின்னடைவு, குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். சிறிது காலம் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம், முடிந்தளவு வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.


