News April 30, 2024
நெல்லை மக்களே இன்று வரி செலுத்தினால் லாபம்

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-25ஆம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியை இன்று மாலைக்குள் செலுத்துபவர்களுக்கு அவர்களது சொத்து வரியிலிருந்து ஐந்து சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சி சேவை மையங்களில் வரியை செலுத்தலாம்.
Similar News
News March 7, 2026
திருநெல்வேலி: வாடகை வீட்டில் இருப்போர் தெரிந்து கொள்ளவும்

நெல்லை மக்களே; நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க.
News March 7, 2026
நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

நாங்குநேரி அருகே பெரும்பத்து பஜாரில் கடந்த 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் வந்த கும்பல் ரோட்டின் அருகே டீக்கடையில் நின்ற மக்களை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சள் குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.
News March 7, 2026
தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


