News December 20, 2025
திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 3, 2026
திருச்சி: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் App மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.
News February 3, 2026
திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது வரும் பிப்.6, 8, 10 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 3, 2026
திருச்சி கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் திருச்சி வ.உ.சி சாலையில் உள்ள இயந்திர கலப்பை பணிமனையில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


