News December 20, 2025

திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News January 25, 2026

த.வெ.க வில் இணைந்த முன்னாள் அமைச்சர்

image

திருச்சி வயலூர் சாலையை பூர்வீகமாக கொண்டவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிகாட்டுதல்படி வலம் வந்தவரும், அதிமுக அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றிய கு.ப. கிருஷ்ணன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்துவந்த இவர் இன்று தமிழக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News January 25, 2026

திருச்சி டிஎஸ்பிக்கு விருது: சமூக ஆர்வலர்கள் பாராட்டு

image

2026, குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்டு காவல்துறை பிரிவில் “தகைசால் பணிக்கான விருது” தமிழக காவல்துறை சேர்ந்த 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு காவல்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 25, 2026

திருச்சி: 12th போதும்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!