News December 20, 2025
தூத்துக்குடியில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.11.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மாமுனீஸ்வரன் (21) கைது செய்யப்பட்டார். இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 25, 2025
தூத்துக்குடி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 25, 2025
தூத்துக்குடி: மாடு வளர்ப்பவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 2025-2026-ஆம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,10,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும்பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
தூத்துக்குடி: மாடு குறுக்கே வந்ததால் பறிபோன உயிர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலை மோடி நகர் பகுதியில் மாடு குறுக்கே வந்ததில் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பு செயலாளர் பென்சிகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


