News December 20, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு முதல் நாளை (டிச.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
பெண்களை மானபங்கப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குபதிவு

அகரக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குடும்பத்திற்கும், அணைக்கரைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த திருக்குமரன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று திருக்குமரன் ஆகாஷின் தாயாரையும், அத்தையும் அடித்து ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் திருக்குமரன் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் துணிகரம்

மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகிலா, கச்சிராயப்பாளையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் குடும்பத்துடன் கள்ளக்குறிச்சி வந்துள்ளார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 4¾ பவுன் நகை, ரூ.3,000ரொக்கம் மற்றும் ரேஷன் கார்டு அடங்கிய கைப்பை திருடு போனது. இதன் மதிப்பு ரூ.5லட்சம் ஆகும்.கோகிலா அளித்த புகாரின் பேரில், பேருந்து நிலையத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபரை கள்ளக்குறிச்சி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News January 30, 2026
கள்ளக்குறிச்சியை உலுக்கிய சம்பவம்!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அஜய்குமார் (24) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் குழந்தை திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த விசாரணையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் கணவர் அஜய்குமார், அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


