News April 30, 2024
ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்ததால் போராட்டம்

கடலாடி ராசிகுளம் பகுதியை சேர்ந்தவர் கனகவல்லி (24). கர்ப்பிணியான இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு ஆண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று திடீரென இறந்தது. சிகிச்சை குறைபாடு எனக்கூறி உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் உடலை பெற்று சென்றனர்.
Similar News
News August 24, 2025
BREAKING: பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் 4 மாதங்களில் விடைபெற தயாராகியது.
News August 24, 2025
ராம்நாடு: இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

ராம்நாடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.
News August 24, 2025
ராம்நாடு: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <