News December 19, 2025
செங்கோட்டையன் அதிரடி.. EPS அதிர்ச்சி

அடுத்தடுத்து கொங்கு மண்டலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். இதன்படி, டிச.30-ல் சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஈரோட்டில் பரப்புரை செய்து கொங்கு பகுதியில் விஜய்க்கான ஆதரவை காண்பித்தார் செங்கோட்டையன். இந்நிலையில், EPS-ன் சொந்த மாவட்டமான சேலத்தில் விஜய்யை களமிறக்கி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்க KAS தயாராகி வருகிறாராம்.
Similar News
News December 27, 2025
ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. புதிய அப்டேட்

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரொக்கமும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2.20 கோடி ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாம். இதனால் விரைவில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 27, 2025
சிலர் விவசாயி வேடம் போட்டு ஏமாற்றுகின்றனர்: CM

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிலர் விவசாயி வேடம் போட்டு, விவசாயிகளையே கொச்சைப்படுத்துவதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் செயல்படுத்திய விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட CM, 20 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,731 கோடி நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். திருவண்ணாமலையில் ₹3 கோடிக்கு சிறப்பு கிடங்கு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
News December 27, 2025
ஆஷஸ்: போராடி வெற்றிபெற்ற இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 175 ரன்களை நோக்கி விளையாடிய இங்கிலாந்தின் ஜாக் கிராவ்லி(37), பென் டக்கெட்(34), ஜேகப்(40) ஆகியோர் நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர். முதல் இரு இன்னிங்சில் ஆஸி., 152, 132 ரன்கள் எடுத்திருந்தது. ஏற்கெனவே ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து, இந்த வெற்றியின் மூலம் ஒயிட் வாஷை தவிர்த்துள்ளது.


