News December 19, 2025
விசைத்தறி நவீனமயமாக்க ரூ.10 லட்சம் வரை மானியம்!

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ், பழைய தறிகளை ரேப்பியர் தறிகளாக மாற்ற அதிகபட்சம் ₹10 லட்சம், புதிய ரேப்பியர் தறிகள் வாங்க 20% மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், வார்ப்பிங் மற்றும் சைசிங் போன்ற பொது வசதி மையங்கள் அமைக்க ₹60 லட்சம் வரை மானியம் உண்டு. விருப்பமுள்ள நெசவாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
தாரமங்கலம் அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

தாரமங்கலம் அருகே எல்லாயூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன், 51. இவர் அதே பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த போது நேற்று தாரமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், அத்திகாட்டானூர் பகுதியில் கோவிந்தன் என்பவரை லாட்டரி விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
News December 22, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச. 21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.