News December 19, 2025
ரேஷன் கார்டுகளுக்கு KYC அப்டேட்.. தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் <<18561240>>KYC அப்டேட்<<>> செய்ய மத்திய அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விரல் ரேகையை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக TN அரசு விளக்கம் அளித்துள்ளது. ரேகையை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதம்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ‘zone-effect’ எனும் புதிய ஆயுதத்தை ரஷ்யா வடிவமைத்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா தொடர்பான தகவல்களை ஸ்டார்லிங்க் உக்ரைனுக்கு வழங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். அதிக அழுத்தம் கொண்ட சிறிய குண்டுகளை செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதைகளில் செலுத்தி மோதவிட்டு வெடிக்க வைக்கும் வகையில், இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
News December 22, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. வெளியான புதிய தகவல்

கடந்த ஆண்டு போலவே பொங்கல் தொகுப்பு ஜன.9-ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜன.7-ம் தேதியே குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News December 22, 2025
விஜய்யை அரசியல்வாதியாக ஏற்கவில்லை: சரத்குமார்

மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என கூறும் விஜய், அதை எப்படி செய்யப்போகிறார் என்று தெளிவாக சொல்ல வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். பத்து லட்சம் கோடி கடனில் இருந்து, தமிழகத்தை எப்படி மீட்பது என்பதை பற்றியெல்லாம் விஜய் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் தான் இன்னும் விஜய்யை அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.


