News December 19, 2025
குமரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

குமரியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
கன்னியாகுமரி – 28181,
நாகர்கோவில் – 27856,
குளச்சல் -25366
பத்மநாபபுரம் -21684
விளவங்கோடு -28396
கிள்ளியூர் -21890.
இவர்களில் இறந்த வாக்காளர்கள் – 56950. இரட்டை பதிவு கொண்டவர்கள் 11849, குடி பெயர்ந்தவர்கள் 75849, கண்டறிய இயலாத மற்றும் குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்கள் 8474.
Similar News
News January 2, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 2, 2026
குமரி மக்களே அரசு பஸ்ஸில் பிரச்சனையா?

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News January 2, 2026
மாற்று வழியில் கன்னியாகுமரி – ஹைதராபாத் ரயில்

கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் (ரயில் எண் 07229) ஜனவரி 02, 09, 23 மற்றும் 30 அன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருப்பி விடப்படும். மதுரை, கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


