News December 19, 2025
5th T20: இந்தியா பேட்டிங்

5-வது மற்றும் கடைசி டி20-ல் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. தொடரை வெல்ல இந்தியாவும், தொடரை சமன் செய்ய தெ.ஆப்பிரிக்காவும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Similar News
News December 24, 2025
முகம் காட்டாமல் உருவாகியுள்ள உலகின் முதல் படம்!

AI புரட்சியால் உலகமே மாறினாலும், ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி அசத்த வேண்டும் என்ற ஆர்வம் சினிமாவில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் டிச.25 அன்று ரிலீஸாக உள்ள படம் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’. முகம் காட்டாமல், வசனங்களின்றி உருவான உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவர உள்ளது. பிரணிதா வாக்சவுரே நாயகியாக நடிக்கும் இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் மாம்புல்லி இயக்கியுள்ளார்.
News December 24, 2025
வங்கி கணக்கில் ₹10,000.. அறிவித்தது தமிழக அரசு

முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை மறுநாளுடன் (டிச.26) நிறைவடைகிறது. உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <
News December 24, 2025
கர்ப்பிணிகள் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் தினமும் வாக்கிங் செல்வது தாய் மற்றும் சேய்க்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும், 5,000-10,000 அடிகள் வரை நடக்க வேண்டும் என்று கூறும் டாக்டர்கள், ஒரே நேரத்தில் நடக்காமல் காலை, மதியம், இரவு என பிரித்து நடக்கலாம் என்கின்றனர். இதனால், *சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் *குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் *சுகப்பிரசவ வாய்ப்புகள் அதிகமாகும் என்கின்றனர் டாக்டர்கள்.


