News December 19, 2025
JUST IN:திருவள்ளூரில் 6.19 லட்சம் பேர் நீக்கம்

இன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 6,19,777 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 22,69,499 வாக்காளர்கள் உள்ளனர் என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) மதுபான சில்லறை கடைகள் (F.L-1) மற்றும் F.L-2 / F.L-3 வகை மதுபான உரிமம் பெற்ற கடைகள், (ஜன.16) மற்றும் (ஜன.26) ஆகிய தினங்களில் முழுமையாக மூடப்படும் என தெரிவித்தார். மேலும் உத்தரவை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 13, 2026
திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


