News December 19, 2025

JUST IN: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

image

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 25,79,576 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். SIR-க்கு பின்பு 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News February 6, 2026

சென்னை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

image

சென்னை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

சென்னையில் நாளை மின்தடை

image

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.07) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஸ்டான்லி, கத்திப்பாரா, மாதவரம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. உடனே ஷேர் பண்ணுங்க.

News February 6, 2026

சென்னை: தாய்க்கு எமனாக மாறிய மகன்!

image

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஆக்ஸிலா (55) இவரது மகன் பிரிட்டோ (28) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் வேலை இல்லாமல் இருப்பதால், குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆக்சிலா, மகனிடம் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இன்று ஏற்பட்ட தகராறில் நிகில் பிரிட்டோ, தாயை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!