News December 19, 2025

BREAKING: ஈரோட்டில் 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்!

image

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை ஈரோடு ஆட்சியர் கந்தசாமி இன்று வெளியிட்டுள்ளார். இதில் இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாத வேறு முகவரிக்கு குடிபெயர்ந்த வாக்காளர்கள், இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள், மற்ற இனங்கள் என ஆக மொத்தம் 3,25,429 வாக்காளர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. SIR பணிகளுக்கு முன் 19,97,189 வாக்காளர்கள் இருந்தநிலையில் தற்போது 16,71,760 வாக்காளர்ள் உள்ளனர்.

Similar News

News December 20, 2025

ஈரோட்டிற்கு கூடுதலாக ரூ.400 கோடி!

image

ஈரோடு மாவட்டத்துக்கு இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்க கூடுதலாக ரூ.400 கோடி அரசிடம் கேட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை டிசம்பர் மாதம் வந்து விடும் என இருந்தோம். ஆனால் வரவில்லை. அப்படி ஏதேனும் தொகை வந்தால் 31-ந் தேதிக்குள் கடன்கள் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தகவல் தெரிவித்தார்.

News December 20, 2025

ஈரோட்டில் அபராதம் விதித்து அதிரடி!

image

பர்கூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஒந்தனை ஆழ்வார்த்தி பகுதியில், பசுவன் என்பவரது பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து மட்டும் அல்லாமால் விதிமுறைகளை மீறி தனது வீட்டிற்கும், விவசாய நிலத்திற்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி பயன்படித்தியாதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிக்கு 10,875 ரூபாய் அபராதம் விதித்தனர்.

News December 20, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!