News December 19, 2025
JUST IN: கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,80,626-ல் இருந்து 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரி: விபத்தில் மூதாட்டி பலி!

பந்தாரப்பள்ளி, ஓசூர்-கிருஷ்ணகிரி NH-ல் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருகின்றனர்.
News January 13, 2026
கிருஷ்ணகிரி: துக்க வீட்டுக்கு சென்ற பெண் பலி!

பெரிய ஜோகிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (52) நேற்று முன்தினம் (ஜன.12) தனது சித்தியான முருகம்மாளுடன் (54) துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு சாமல்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி – தி.மலை NH-இல் பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மத்தூர் போலீசார் விக்னேஷ் (27) எனபவரை கைது செய்தனர்.
News January 13, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


