News December 19, 2025
திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- DON’T MISS!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள் புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 20, 2025
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான 2025 – 26 ம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS) வரும் ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 20. ஆனால், தற்போது மாணவர்களின் நலன் கருதி கால அவகாசம் ஜனவரி 23, மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
திருப்பத்தூர் ஆசிரியர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டம் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 6 அன்று ஊரகத் திறனாய்வு தேர்வு (TRUST) நடைபெற்றது. தேர்விற்கான தற்காலிக விடை குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று (டிச.19) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி அறிவித்துள்ளார்.
News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.


