News December 19, 2025
ITI, Diploma போதும்.. ₹63,000 சம்பளம்

◆மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள 203 Technician A காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ◆கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ ◆வயது: 18 -28 ◆தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & Skill தேர்வு ◆சம்பளம்: ₹19,900 முதல் ₹63,200 வரை ◆விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 1, 2026 ◆விண்ணப்பிக்க <
Similar News
News December 26, 2025
AI வந்தாலும் மனிதர்களின் தேவை இருக்கும்: IT செயலாளர்

AI-ஆல் வேலை இழப்பு விகிதம் இந்தியாவில் குறைவாக இருக்கும் என IT செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் white-collar வேலைகள் குறைவு. அதேபோல், அறிவியல், டெக்னாலாஜி, இன்ஜினியரிங், மருத்துவ துறைகளில் அதிக white-collar வேலைகள் இருப்பதால், புது வாய்ப்புகள் பெருகும். மேலும், AI செய்யும் வேலைகளை மேற்பார்வையிட மனிதர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. NEW UPDATE

பொங்கல் பரிசு தொகுப்பை அரசு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, புதிய கார்டுகள் பிரிண்ட் நிலையில் உள்ளதாக கூறினர். TN அரசு பொங்கல் பரிசை அறிவிப்பதற்கு முன்னரே, புதிய கார்டுகள் ஆக்டிவ் நிலையிலிருந்தால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
News December 26, 2025
Freshers-க்கு ₹21 லட்சம் சம்பளம்.. Infosys புதிய முயற்சி!

பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ், புதிய பட்டதாரிகளை கல்லூரி வளாகம் மற்றும் நேரடி ஆட்சேர்ப்பு ஆகிய முறைகளில் பணியில் அமர்த்த தயாராகி வருகிறது. அதன்படி, அவர்களுக்கு தகுதி மற்றும் பணிப் பொறுப்புகளின் அடிப்படையில், ஆண்டுக்கு ₹7-21 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய ஐடி துறையில் புதியவர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்களில் மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


