News December 19, 2025
திருப்பத்தூர் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
திருப்பத்தூர்: காவல்துறை எச்சரிக்கை பதிவு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (டிச-19) “மதுபோதையில் வாகனம் இயக்குவது உங்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ” என சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News December 19, 2025
JUST IN: திருப்பத்தூரில் 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்!

வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தம் முடிவடைந்து. அதன்படி இன்று (டிச.19) வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், 1,16,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தற்போது, மொத்தம் 8,82,672 வாக்காளர்கள் உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.
News December 19, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற (30-12-2025) அன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என நேற்று (டிச-18) ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்தார். (27-12-2025) மற்றும் (28-12-2025) ஆகிய இரு தினங்களில் திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுவதையொட்டி, இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.


