News December 19, 2025

காஞ்சிபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

காஞ்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…

image

காஞ்சிபுரத்தில் நாளை டிசம்பர் 27 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் காலை 9:00 மணி முதல் தொடங்கி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்களுடன் நேரடியாக முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27237124 அழைக்கலாம்.

News December 26, 2025

நாளை ஆசிரியர் வாரியம் மூலம் உதவி பேராசிரியர் தேர்வு

image

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியருக்கான தேர்வு 27.12.2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி பிற்பகல் வரை மற்றும் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணிவரை என இரு தேர்வுகளாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளி தேர்வர்களாக 18 தேர்வர்கள் உட்பட 614 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

News December 26, 2025

காஞ்சி: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!