News April 30, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

நெல்லை வடக்கு சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராஜுவ். இன்ஜினியர் ஆன இவர் நேற்று கயத்தாறுக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கருப்பசாமி என்பவர் உடன் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது கயத்தாறு சாலையில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராஜுவ் பலத்த காயங்களுடன்  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 15, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2025

தூத்துக்குடி மக்களே போட்டோ எடுக்க ரெடியா?

image

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புகைப்படக் கலைஞர்கள், பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடைபெற உள்ளது.இதில் தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மீனவர்களின் வாழ்க்கை, இயற்கை காட்சி புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பலாம். இதற்கான விதிமுறைகள், விண்ணப்பிக்கும் முறைகளை <>இங்கே கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News August 14, 2025

தூத்துக்குடி: மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் வேலைவாய்ப்பு

image

மாவட்ட நலவாழ்வு சங்கம், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் (MLHP) தொகுப்பூதிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.18,000. விண்ணப்பங்களை <>டவுன்லோடு<<>> செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628002 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!