News December 19, 2025

திருவள்ளூர்: பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 514 கிரெடிட் ஆஃபீசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க அடுத்தாண்டு ஜன.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க! ( SHARE )

Similar News

News December 25, 2025

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கனுமா..?

image

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு வரும், டிச.27 மற்றும் டிச.28, ஜன.03, ஜன.04 ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. பொது மக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து இம்முகாம்களில் வழங்கிடுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

News December 25, 2025

திருவள்ளூர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை!

image

ஆரம்பாக்கத்தில் கடந்த ஜுலை மாதம் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசாமைச் சேர்ந்த பிஸ்வகர்மாவுக்கு (35) இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.1.45 லட்சம் அபராதமும் , வழங்கி போக்சோ நீதிமன்றம் நேற்று(டிச.24) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.1.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2025

காரில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த காரை போலீசார் தடுத்து சோதனை இட்டனர். அப்போது காரில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கார், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளா மலப்புரத்தை சேர்ந்த சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.

error: Content is protected !!