News December 19, 2025
தென்காசி: விதிமீறினால் சிறை.. கலெக்டர் எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் வேலை அளிப்பவர்களுக்கு ரூ.50,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News January 12, 2026
தென்காசி: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

தென்காசி மக்களே,மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News January 12, 2026
தென்காசி: கேரளாவில் இருந்து தடைசெய்யபட்ட பொருள் கடத்தல்

கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டம் புளியரை வழியாக 34 கிலோ புகையிலைப் பொருட்கள் கொண்டு வந்த ஆய்க்குடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும் தென்மலை பகுதியை சேர்ந்த ஜோபின் ஜாய் என்பவரும் புளியறையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் புகையிலை பொருட்களோடு பிடிபட்டனர். போலீசார் கைது செய்து விசாரணை.
News January 12, 2026
தென்காசியில் ஒரே நாளில் 8 பேர் G.Hல் அனுமதி!

தென்காசி, திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளம் பகுதியில் நேற்று மாலை வெறிநாய் கடித்ததில் முத்துலட்சுமி, பத்மபிரியா உட்பட 5 பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். ஒரே நாளில் 8 பேரை கடித்து குதறிய தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


