News December 19, 2025
சிவகங்கையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
Similar News
News January 29, 2026
JUST IN சிவகங்கை: டிரோன் பறக்க தடை; ஆட்சியர் எச்சரிக்கை

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜன.30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்தார். தடையை மீறி டிரோன்களை பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News January 29, 2026
சிவகங்கை: நிலங்களை அளவு செய்ய புதிய இ – சேவை

சிவகங்கை மாவட்டத்தில் நிலங்களை அளவு செய்ய இ- சேவை மையங்களை அணுகலாம். வட்ட அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இனிய வழியில் விண்ணப்பிக்கும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்து பின்னர் மனுதாரர் https://eservices.tn.gov.in என்ற இணைய வழிச்சேவை மூலமாக பத்திரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News January 29, 2026
சிவகங்கை: இரும்பு கடைக்குள் புகுந்த மலைப்பாம்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே ஏரியூர் விலக்கு சாலையை அடுத்த இரும்பு கடையில் பாம்பு ஒன்று படுத்திருந்தது தெரியவந்த நிலையில் கடையின் பணியாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருப்புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அது மலைப்பாம்பு என தெரியவந்தது. பின்னர் அதனை பிடித்து மதகுபட்டி மண்மலை வனப்பகுதியில் விடுவித்தனர்.


