News December 19, 2025
சென்னை: கலர் கோழிக்குஞ்சுக்காக கொலை!

ஆவடி அருகே, வீட்டில் வளர்த்த கலர் கோழிக்குஞ்சை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்த குற்றவாளி அன்பழகனுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று (டிச.18) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 13, 2026
சென்னை: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 13, 2026
சென்னை: வியாபாரி துடிதுடித்து பலி!

தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (57). இவர், சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் தங்கி, டிரை சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று சைக்கிளில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் – கொட்டிவாக்கம் நோக்கி செல்லும்போது பின்னால் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கோபால் வீரையா (39) என்பவரை கைது செய்தனர்.
News January 13, 2026
சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

செம்பியம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதே குடியிருப்பில் வசிக்கும் ஐடி ஊழியர் கந்தசாமி (40), ஜெபம் செய்வதாக கூறி அழைத்து சென்று, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டு தப்பித்து பெற்றோரிடம் தெரிவிக்க, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கந்தசாமியை நேற்று கைது செய்தனர்.


