News December 19, 2025

மயிலாடுதுறை: 1,264 வழக்குகளுக்கு தீர்வு

image

மயிலாடுதுறை கோர்ட்டில் மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் நீதிபதி சுதா முன்னிலை வகித்தார். சிவில் வழக்குகள், குற்றவழக் குகள், மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய வழக்குகள். குடும்பநல வழக்குகள் உட்பட 1,264 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடியே 40 லட்சம் தீருதவித்தொகையாக பெற்றுத்தரப்பட்டது.

Similar News

News January 11, 2026

மயிலாடுதுறை: முக்கியமான Certificates இல்லையா?

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <>E-பெட்டகம் <<>>என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

மயிலாடுதுறை: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

மயிலாடுதுறை: மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தை கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த 34 வயதான கட்டிடத் தொழிலாளி, அவரது மகளான 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!