News December 19, 2025
வாழப்பாடி அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து, இவர் தனது விளைநிலத்தில் குழி தோண்டிய போது, பழங்காலத்து கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது, 9ம் நூற்றாண்டில் ஆத்தூர் பகுதியில் ஆட்சி செய்த இராமாடிகள் என்னும் குறுநில மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட நடுகல் என தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் வரலாற்றை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 14, 2026
வாழப்பாடி அருகே பயங்கர விபத்து: 2 பெண்கள் பலி!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் பத்தாங்கல் மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியே வந்த சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் சின்ன பிள்ளை (60) மற்றும் அவரது மருமகள் காயத்ரி (35) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
ஜனவரி.16-ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டுமென ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட எந்தவித இறைச்சி கடைகளும் திறக்க கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.