News December 19, 2025
ராணிப்பேட்டை: வாகனம் மோதி வாலிபர் பலி

ஜோதிமோட்டூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், திருத்தணியைச் சேர்ந்த மதன் (30) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாராஞ்சி சாலையில் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. தகவலறிந்து வந்த சோளிங்கர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.
Similar News
News January 10, 2026
ராணிப்பேட்டை: GPAY பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
ராணிப்பேட்டை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

ராணிப்பேட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு ‘HI’ மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
ராணிப்பேட்டையில் மழையால் மின்தடையா? உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!


