News December 19, 2025
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி

குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி குமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. ரூ.15000, ரூ.10000, ரூ7500 என பரிசுகள் வழங்கப்படுகிறது. ஓவியத்தை ஜன.5.ம் தேதிக்குள் நாகர்கோவில், குமரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கலாம் என குமரி மாவட்ட எஸ்.பி தகவல் தொிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
குமரி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தக்கலை பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ்(23). 5 ஆண்டுக்கு முன்பு +2 படித்தபோது விபத்தில் சிக்கிய ஜெனிஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவரால் சரிவர செயல்பட முடியாததால் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜன.7.ம் தேதி இரவு மாடி அறையில் இருந்த ஜெனிஷ்க்கு சாப்பாடு கொடுக்க தாயார் மரிய புஷ்பம் சென்றபோது தூக்கில் இறந்த நிலையில் ஜெனிஷ் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.
News January 9, 2026
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News January 9, 2026
குமரி: முன்னாள் எம்.எல்.ஏ வின் பேரன் குண்டாசில் கைது

அஞ்சுகிராமம் அருகே தனியார் சொகுசு விடுதியில் பிறந்தநாள் விழா என்ற பெயரில் போதை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது தமிழகத்தையே அதிர வைத்தது. இதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த குலசேகரம் பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-வின் பேரன் கோகுல் கிருஷ்ணன்(34) உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கோகுலகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


