News December 19, 2025

சீன Cold-rolled steel-களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு

image

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Cold-rolled steel-கள் மீது இந்தியா 5 ஆண்டுகளுக்கு கூடுதல் இறக்குமதி குவிப்பு தடுப்பு வரியை (Anti-dumping duty) விதித்துள்ளது. சீனா மிகக் குறைந்த விலையில் அவற்றை இந்திய சந்தையில் குவிப்பதால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் நஷ்டமடைவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்க ஒரு டன் எஃகு மீது சுமார் ₹20,000- ₹38,000 வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

விவேகானந்தர் பொன்மொழிகள்!

image

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது *பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது *கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்

News December 30, 2025

திமுக கூட்டணியை சிதைக்க முயற்சி: ஷா நவாஸ்

image

TN-ன் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கேள்வி கேட்காமல், நலத்திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசை காங்கிரஸ்காரர்கள் கேள்வி கேட்பதாக ஆளூர் ஷா நவாஸ் கூறியுள்ளார். 60 ஆண்டு Cong ஆட்சியைவிட 10 ஆண்டு BJP ஆட்சியில் அதிக கடன் பெற்றதை ஒப்பிட வேண்டியவர் (பிரவீன் சக்ரவர்த்தி), TN-ன் கடனை உ.பி.,யுடன் ஒப்பிடுவதாக சாடியுள்ளார். இது Dmk,Cong கூட்டணியை சிதைக்க துடிக்கும் செயல் எனவும் அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.

News December 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 565
▶குறள்:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
▶பொருள்: யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

error: Content is protected !!