News December 19, 2025

தென்காசி: மூட்டை மூட்டையாக புகையிலை கடத்தல்.. கைது

image

பாவூர்சத்திரம் – மேலப்பாவூா் சாலையில் உதவி ஆய்வாளர் ராஜேஸ் குமாா் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருள்கள், பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், க.சோ்மன் (46), த.சிவன்பாண்டி (43) ஆகியோரை கைது செய்தனா்.

Similar News

News December 20, 2025

தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

News December 20, 2025

தென்காசி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

தென்காசி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,51,902 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் எண் (அ) மொபைல் எண்ணை பதிவு செய்யவும். அதில், உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

தென்காசி: மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

image

சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் – உமா (31). இவர்களுக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். உமாவின் தயார் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை மீட்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த உமா, தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!