News December 19, 2025
புதுகை: கோயிலுக்கு சென்ற கார் விபத்து – 4 பேர் படுகாயம்!

பட்டுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (35), சதீஷ் (29), பாலசுப்பிரமணியன் (30), கார்த்திகை செல்வன் (25) ஆகியோர் சதுரகிரிக்கு ஒரு காரில் சென்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலையில் அம்புலி ஆற்று பாலத்தில் கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News January 10, 2026
புதுக்கோட்டை மக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 4,663 ச.கி.மீ
2. மொத்த மக்கள்தொகை: 16,18,345 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 6
4. பாராளுமன்ற தொகுதி: 4
5. வருவாய் கிராமங்கள்: 763
6. ஊராட்சி ஒன்றியங்கள்: 13
7. வட்டங்கள்: 12
8. பேரூராட்சிகள்: 8
9. மாநகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News January 10, 2026
புதுகை: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற<
News January 10, 2026
புதுகை: சாலை விபத்தில் துடிதுடித்து பலி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இருந்து வடகாட்டிற்கு நேற்று குணசேகரன் (60) பைக்கில் சென்றுள்ளார். அப்போது வடகாடு அம்புலி ஆற்றின் அருகே உள்ள சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


