News December 19, 2025

வேலூர்: பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை!

image

வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (37), மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் சத்துவாச்சாரி போலீசில் கடந்த 5ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு தலைமறைவாக இருந்த தட்சிணாமூர்த்தியை நேற்று (டிச.18) கைது செய்தனர்.

Similar News

News January 2, 2026

வேலூர் உழவர் சந்தைகளில் 127 கோடிக்கு வர்த்தகம்

image

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிக்கொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இதில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை உழவர் சந்தைகள் மூலம் 32 ஆயிரத்து 985 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.127 கோடியே 78 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூரில் 58 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 24 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகளும் இதர விதிகளை மீறியதாக மொத்தம் 58 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!