News December 19, 2025

அரியலூர்: காவல் வாகனங்களை ஆய்வு செய்த SP

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விஷ்வேஷ் பா சாஸ்திரி காவல் அலுவலகத்தில் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் காவல்துறையினர், தலைக்கவசம் மற்றும் ஒளிரும் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் பூட்டி இருக்கும் வீடுகள் முன்பு சந்தேகத்திற்கு இடமான செயல்கள் நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Similar News

News December 24, 2025

அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு இடமா?

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும், சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…

News December 24, 2025

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

அரியலூர்: இதை MISS பண்ணிடாதிங்க!

image

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், நாளை மறுநாள் (டிச.26) எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்த முகாம் தொடங்கி நடைபெற உள்ளது. முகாமில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு தொடர்பான குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!