News December 19, 2025
உலகின் உயரமான கட்டடங்கள் PHOTOS

உலகின் மிக உயரமான கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டடங்கள், நகரங்களின் அடையாளமாகவும் உள்ளன. அப்படி உலகப் புகழ்பெற்ற டாப்-10 உயரமான கட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News January 2, 2026
அரசு ஊழியர்களுக்கு தீர்வு கிடைக்குமா?

<<18733786>>இடைநிலை ஆசிரியர்கள்<<>> கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட கூட்டமைப்புகள் ஜன.6 முதல் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆய்வறிக்கை பரிசீலனைக்கு பின் ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கூட்டமைப்புகளுடன் அமைச்சர் எ.வ.வேலு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
News January 2, 2026
இன்று முதல் இலவச தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (ஜன.2) முதல் ஜன.8-ம் தேதி வரை நேரடி இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு டோக்கன் இல்லாமலேயே நேரடியாக வந்து சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம். இலவச தரிசனம் என்பதால், நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.
News January 2, 2026
ஆதவ் அர்ஜுனா ஓடி ஒளிந்தார்: மா.சு

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஜீரோ என்ற நிலையில் உள்ளது என மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்நிலையில், இவ்வாறு பேசுவதற்கு மா.சு.,க்கு அறிவு இருக்கா இல்லையா என ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக மா.சு.,விடம் கேட்டதற்கு, கரூரில் 41 பேர் இறந்தபோது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த அறிவாளிகள் எல்லாம் தன்னை அறிவாளி இல்லையென பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.


