News December 19, 2025
மெஸ்ஸி நிகழ்ச்சி: ₹50 கோடிக்கு கங்குலி அவதூறு வழக்கு

கொல்கத்தாவில் கலவரமாக மாறிய மெஸ்ஸியின் நிகழ்ச்சிக்கு, கங்குலி இடைதரகராக செயல்பட்டதாக AFCK தலைவர் உத்தம் சஹா கூறியிருந்தார். இந்நிலையில் தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவலை சஹா பரப்பியதாக கூறி, கங்குலி ₹50 கோடிக்கு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிகழ்விற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
வங்கதேச குற்றச்சாட்டுக்கு BSF மறுப்பு

வங்கதேச மாணவர் தலைவர் ஹாதியை படுகொலை செய்தவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக, அந்நாட்டு போலீசார் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதை மறுத்துள்ள BSF, எந்த ஒரு தனிநபரும் சர்வதேச எல்லையை தாண்டியதற்கான ஆதாரம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும், எல்லையில் பாதுகாப்பு படையினர் எப்போதும் உச்சபட்ச கண்காணிப்பில் இருப்பதாகவும், சட்டவிரோத ஊடுருவல் இருந்தால் கண்டிப்பாக தெரியவந்துவிடும் என்றும் கூறியுள்ளது.
News December 29, 2025
திமுக, காங்., கூட்டணியை பிரிக்க முடியாது: SP

திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தவெகவுடன் இணையலாம் என்று தொடர்ந்து அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சீட்டுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இல்லை என்றும் கொள்கையால் உருவாக்கப்பட்ட கூட்டணி எனவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் இதை யாராலும் பிரிக்க முடியாது, இது எஃகு கூட்டணி என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News December 29, 2025
ராசி பலன்கள் (29.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


