News December 19, 2025
புதுவை: 6,6ஏ படிவம் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்

புதுவையில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 9,18,111 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர், மேலும் 1,03,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 6, 6 ஏ பயன்படுத்தி வரும் ஜன15-தேதி வரை விண்ணபித்து சேரலாம் என, தேர்தல் துறை அறிவித்துளளது. இதன்படி பட்டியலில் சேர்க்கக்கோரி 6,6ஏ பயன்படுத்தி 447 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
Similar News
News December 27, 2025
புதுச்சேரி: முதலமைச்சரை சந்தித்தார் தலைமை நீதிபதி

புதுச்சேரி, இன்று (டிசம்பர் 27) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஹிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, இன்று புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். அவரை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து வாழ்த்தியதுடன், பரஸ்பர நலன்களைப் பற்றிய கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உடனிருந்தார்.
News December 27, 2025
புதுவை: காங்கிரஸ் அணி செயலாளர் நீக்கம்

புதுவை என்.ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் அய்யனார் செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, மணிகண்டன் மீது போலி மருந்து வழக்கில் காவல் துறை இவரை கைது செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட இவரை என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியின், மாநில செயலாளர் பதவி மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.
News December 27, 2025
புதுச்சேரி: முதல்வரிடம் ஆசி பெற்ற மத்திய அமைச்சர்

இன்று புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார். அவருக்கு முதல்வர் மலரும் எலுமிச்சம்பழமும் கொடுத்து ஆசீர்வதித்தார். மேலும் மத்திய அமைச்சர் புதுச்சேரி காவல்துறையை, நவீனமயமாக்க தேவையான நிதியை ஒதுக்குவதாகவும் உறுதியளித்தார்.


