News December 19, 2025
திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.
Similar News
News December 27, 2025
திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
திருச்சி: லஞ்சம் வாங்கிய போலிஸுக்கு சிறை

திருவெறும்பூர் – நவல்பட்டு சாலையில், குணசேகரன் என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஏட்டு ராமசாமி என்பவர், ‘உனக்கு அரெஸ்ட் வாரண்ட் வந்துள்ளது’ என மிரட்டி ரூ.10,000 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ராமசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார்.
News December 27, 2025
திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க


