News December 19, 2025
பெரம்பலூர்: விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

பெரம்பலூரில் உள்ள தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும், மாணவ மாணவிகளிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Similar News
News December 28, 2025
பெரம்பலூர்: ஆணழகன் போட்டி

பெரம்பலூர் 2025 க்கான மிஸ்டர் ஆணழகன் (body building) போட்டி நேற்று பெரம்பலூர் தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாடி பில்டர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற பாடி பில்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
News December 28, 2025
பெரம்பலூர்: நகரும் நியாயவிலை கடை திறப்பு

பெரம்பலூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தில், புதிய நகரும் நியாயவிலை கடையினை நேற்று, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள், செயலாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News December 28, 2025
பெரம்பலூர்: குளத்தில் மூழ்கி பரிதாப பலி!

ஆலத்தூரை அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரி குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.. தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.


