News April 30, 2024
மயிலாடுதுறை அருகே காய்கறி வார சந்தை

தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை தோறும் வார காய்கறி சந்தை நடைபெறுகிறது.நேற்று மாலையில் நடைபெற்ற வார காய்கறி சந்தையில் கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளையும் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்தனர்.பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
Similar News
News August 21, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் நிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. ஆகையால் இத்திட்டத்தில் பயன்பெறும் சீர்காழி மற்றும் செம்பனார்கோயில் ஒன்றியங்களை சேர்ந்த 30 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21), நாளை குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
மயிலாடுதுறை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் நாளை (ஆக.22) காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவுள்ளனர். மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை சேர் பண்ணுங்க.!