News December 19, 2025

மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி

image

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் குறித்த விழிப்புணர்வு மற்றும் வசதியாக்கல் நிகழ்வு துவங்கப்பட்டது. இதனை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.

Similar News

News December 28, 2025

ஈரோடு: முற்றிலும் நிறுத்தம்!

image

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் கீழ் பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு காலம் முடிவடைந்ததால் அணையில் இருந்து கீழ் பவானி பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே சமயம் அரக்கன் கோட்டை தட பள்ளி பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.77 அடியாக உள்ளது.

News December 28, 2025

ஈரோடு: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

image

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!

News December 28, 2025

பவானிசாகரில் கடைகளுக்கு சீல்!

image

பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன் துறை பட்ரமங்கலம் பகுதிகளில் செயல்படும் 3 மளிகை கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜேந்திரன் ரமேஷ் குமார் நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் மூன்று மளிகை கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

error: Content is protected !!