News December 19, 2025

கிளைகளை வெட்டி சேதப்படுத்தியவர் மீது வழக்கு

image

மம்சாபுரம் பகுதி சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாழைகுளம் பகுதியில், மாந்தோப்பு வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அருகில் தோப்பு வைத்திருக்கும் கருப்பையா என்பவர் மாமரங்களின் கிளைகளை சேதப்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மம்சாபுரம் போலீசார் மம்சாபுரம் கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்த கருப்பையா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

விருதுநகர்: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

விருதுநகர் மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

News December 26, 2025

விருதுநகர் அருகே பாட்டி, பேரனுக்கு வெட்டு

image

விருதுநகர் சூலக்கரை அருகே நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் முருகானந்தம், 48. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மது போதையில் அவ்வழியாக வந்த 10ம் வகுப்பு மாணவரை வழிமறித்து கத்தியால் தாக்கினார். அதை தடுக்கச் சென்ற மாணவரின் பாட்டி ராஜலட்சுமியையும் 65, கத்தியால் வெட்டினார். இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சூலக்கரை போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.

News December 26, 2025

விருதுநகர்: மனைவி பிரிவால் கணவர் எடுத்த விபரீத முடிவு

image

விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 35, செல்வராணி தம்பதியினர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு காரணமாக மனைவி தனது மகனுடன் தனியாக சென்று விட்டார். இதன்பின் தாயாரும் இறந்ததால் மன வேதனையில் இருந்த பாலாஜி, தந்தையுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு உணவருந்தி விட்டு துாங்கச் செல்வதாக வீட்டின் மாடிக்குச் சென்றவர் மனைவியின் சேலையில் துாக்கிட்டு இறந்தார்.

error: Content is protected !!