News December 19, 2025

கிறிஸ்தவமும் திராவிடமும் ஒன்றே: உதயநிதி ஸ்டாலின்

image

கிறிஸ்தவமும், திராவிடமும் அன்பு மற்றும் மனிதநேயத்தையே போதிக்கின்றன என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் பாசிஸ்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது என்றார். மத்திய அரசுக்கு தமிழகத்தின் மீது இரக்கம் இல்லை, வெறுப்பு தான் உள்ளது என்ற உதயநிதி, நமக்குள் இருப்பது கொள்கை உறவு என்றும் தெரிவித்தார்.

Similar News

News January 26, 2026

FLASH: அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை.. உறுதியானது

image

அதிமுக கூட்டணியில் விஜய் இணையப்போவதில்லை என்பதை நேற்றைய <<18953053>>காட்சிகள் உறுதி செய்துள்ளன<<>>. நேற்று முன்தினம் வரை விஜய்க்கு அழைப்பு விடுத்து வந்த அதிமுக, பாஜக தலைவர்கள், நேற்றைய செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு விஜய்யை வசைபாட தொடங்கியுள்ளனர். ஒருபடி மேல் போய் <<18957237>> விஜய்யை ஊழல்வாதி<<>> என அதிமுக விமர்சித்துள்ளது. இது, வரும் தேர்தலில் விஜய் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

News January 26, 2026

குடியரசு தினம் ஏன் ஜன.26ல் கொண்டாடப்படுகிறது?

image

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றாலும், அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வர 1950 வரை ஆனது. 1930 ஜனவரி 26 அன்றுதான் இந்திய தேசிய காங்கிரஸ் ’முழு சுதந்திரம்’ தீர்மானத்தை முதன்முதலில் அறிவித்தது. அந்த நாளைக் கௌரவிக்கவே குடியரசு தினம் ஜன.26-ல் கொண்டாடப்படுகிறது. மேலும் டெல்லியில் இன்று தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம், ஜன.29-ம் தேதி மாலை நடைபெறும் கோலாகல இசை அணிவகுப்புடன் தான் நிறைவடையும்.

News January 26, 2026

தமிழகத்துக்கு விஜய் தேவையில்லாதவர்: KTR

image

அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்த விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். வேலை செய்யும் மனிதனுக்கு 6 விரல்கள் தேவையில்லை; 5 விரல்கள் போதுமானது என்றும், அந்த ஆறாவது விரல் போல தமிழகத்திற்கு விஜய் தேவையில்லாதவர் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் தான் நிற்கும்; இதர கட்சிகள் எல்லாம் கரைந்துவிடும் எனப் பேசினார்.

error: Content is protected !!