News December 19, 2025
இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் கபடி வீரர் உபயதுல்லா ராஜ்புத் இந்திய அணிக்காக விளையாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் நடந்த UnOfficial போட்டியில், அவர் இந்திய அணியின் ஜெர்ஸியில் விளையாடிய போட்டோக்கள் வைரலான நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இது ஒரு தனியார் போட்டி என கூறி, உபயதுல்லா மன்னிப்பு கோரியுள்ளார்.
Similar News
News December 25, 2025
திருவாரூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை கொலை.. காதலன் கைது

‘தி லயன் கிங்’ மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகை இமானி ஸ்மித்(25) தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததாக கூறி காதலன் ஜோர்டான் டி. ஜாக்சன் என்பவரை சற்றுமுன் அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை இமானிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
EPS-ஐ நேரடியாக சந்தித்தார் பிரேமலதா

அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பேசப்படும் நிலையில், EPS-ஐ நேரடியாக சந்தித்திருக்கிறார் பிரேமலதா. ஆனால் இச்சந்திப்பில் அரசியல் பேசவில்லை என கூறிய அவர், குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்குவதற்காகவே சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் ஸ்டாலின் உள்பட பாஜக, காங்., சீமான், விஜய் என அனைவருக்கும் நேரில் அழைப்பிதழை கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


