News December 18, 2025

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 25, 2025

மாதவரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

image

மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யானைகவுனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, ஹவாலா பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், உறுதியானதால் அதிகாரிகள் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தனர்.

News December 25, 2025

சென்னை: இதுவரை 14,941 பேர் பாதிப்பு!

image

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சென்னையில் மட்டும் இந்த ஆண்டு 14,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்; இது கடந்த ஆண்டை விட (48 பேர்) குறைவு என்றாலும், பாதிப்பு தொடர்கிறது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 25, 2025

சென்னை: தண்ணீர் கேன் போடுவது போல் கேடி வேலை!

image

சென்னை மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் நேற்று (டிச-24) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர்கேன் போடுவது போன்று வானத்தில் அனிதா (32) என்கிற பெண் சென்றுள்ளார். மயிலாப்பூர் போலிசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற நிலையில் சுமார் 20 லிட்டர் தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்னை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!