News December 18, 2025
நிர்மலா சீதாராமனுடன் அதிமுக மூத்த தலைவர்கள் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், FM நிர்மலா சீதாராமனை, அதிமுகவின் SP வேலுமணி, CV சண்முகம் ஆகியோர் டெல்லியில் சந்தித்துள்ளனர். கடந்த சில தினங்களாக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்து டெல்லிக்கு விசிட் அடித்த நிலையில் அதிமுக தலைவர்களின் சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது. இதில் தொகுதிப் பங்கீடு பற்றி பேசப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 26, 2025
BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

பள்ளிகள் திறப்பையொட்டி அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் முதல்நாளே, மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தாமதமின்றி புத்தகங்கள் கிடைப்பதை பள்ளி HM-கள் உறுதி செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 26, 2025
அறிவியலையே அதிரவைத்த ‘டார்க் ஆக்சிஜன்’

செடி, கொடிகள் சூரிய ஒளியை வைத்தே ஆக்சிஜனை உருவாக்கும். ஆனால், சூரிய ஒளியே செல்லாத பசிபிக் கடலின் 13,000 அடி ஆழத்தில் ஆக்சிஜன் உருவாவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Polymetallic nodules என்ற பாறையில் இருக்கும் மின்சாரம் (0.95 வோல்ட்), கடல் நீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்து வெளியிடுகிறது. ‘டார்க் ஆக்சிஜன்’ எனப்படும் இது, பூமியில் உயிர் உருவானது குறித்த ஆய்வையே மாற்றியமைத்துள்ளது.
News December 26, 2025
4 சுவருக்குள் எதுவும் நடக்கும்: ஜெயக்குமார்

OPS-ஐ கூட்டணியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், OPS-ஐ சேர்க்க இப்போது ஒருவாய்ப்பு உள்ளது போல் தெரிகிறதே என செய்தியாளர் கேட்க, அதற்கு ‘அரசியலில் ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? 4 சுவருக்குள் 4 விஷயம் நடக்கும். நேரம் வரும்போது தேவையானவற்றை கூறுவோம்’ என்று குறிப்பிட்டார்.


