News December 18, 2025
குளிரில் கைக்குழந்தைகளை தினமும் குளிப்பாட்டலாமா?

பிறந்த குழந்தைகளை குளிர் காலத்தில் தினமும் குளிப்பாட்டினால் சளி, காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம் அம்மாக்களுக்கு இருக்கும். அதற்கான நிபுணர்களின் டிப்ஸ் இதோ! *குழந்தையின் சருமம் வறட்சியாகாமல் இருக்க தினமும் குளிக்க வைக்கலாம் *மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வையுங்கள் *கெமிக்கல் உள்ள சோப்பை தவிர்ப்பது நல்லது *ஆயில் மசாஜ் செய்யலாம் *குழந்தை குறைந்த எடையில் இருந்தால் தினமும் குளிப்பாட்ட வேண்டாம்.
Similar News
News December 26, 2025
BREAKING: ரூபாய் மதிப்பு சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹15 பைசா குறைந்து, ₹89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
News December 26, 2025
விஜய்க்கு விஜய் வசந்த் பதிலடி!

யார் தீய சக்தி, தூய சக்தி என்பது 2026 தேர்தலில் தெரியும் என காங்கிரஸ் MP விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், களத்திற்கு வரும் புதிய கட்சி ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் பல நல்ல திட்டங்களை CM கொண்டு வந்துள்ளார். எனவே எங்கள் கூட்டணியே வெல்லும் என்றார். முன்னதாக திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் ஈரோட்டில் பேசியிருந்தார்.
News December 26, 2025
விடுதலையாகும் சவுக்கு சங்கர்

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த மெட்ராஸ் HC, புகாரளிக்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்ததன் நோக்கம் குறித்து போலீஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தனிநபரை கைது செய்ய முழு அதிகாரத்தையும் போலீஸ் பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கோர்ட் கூறியுள்ளது. விசாரணை அதிகாரியிடம் பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


